இன்று வானத்தில் எரிகல் பொழிவு
வானில் நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளில் ஒன்றான எரிகல் பொழியும் நிகழ்ச்சி இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இதனை பொதுமக்கள் வெறும் கண்களால் காணலாம் என்று அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். கோடிக்கணக்கான புதிர்களை சுமந்துகொண்டு இந்த பிரபஞ்சமானது தொடர்ந்து விரிவடைந்து கொண்டுதான் இருக்கிறது. இதில் சில நேரங்களில் வால் நட்சத்திரங்கள் அருகில் வரும் போது அதன் வால் பகுதியில் உள்ள கற்கள் புவியின் ஈர்ப்பு விசையின் காரணமாக இழுக்கப்பட்டு பூமியில் விழுவது வழக்கம். அதேபோல், 130 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனை சுற்றிவரும் "ஸ்விப்ட் டட்டில்" என்ற வால் நட்சத்திரத்தின் பாதைக்கு நெருக்கமாக இன்று பூமி கடந்து செல்லவுள்ளது. இதனால் அதன் துகள்கள் பூமியின் மீது தொடர்ந்து விழுந்து வருகிறது. அப்படி விழக்கூடிய கற்களும் பூமியிலிருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவிலேயே எரிந்துவிடுவதால் பார்ப்பதற்கு தீபாவளி பட்டாசு வெடிப்பதைப் போன்ற காட்சியை ஏற்படுத்தும். இதனை இன்று முதல் 3 நாட்களுக்கு, வடக்கு வானின் வடக்கு பகுதியில், நள்ளிரவிற்கு பின்பு வெறும் கண்களால் பார்க்கலாம் என்று வானியல் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். Dear visitors, you can see this with your naked eyes.This will not cause any damage to your eyes.So just go out from your home and see this amazing incident in sky.This will occur three days starting from today. |
No comments:
Post a Comment